பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2015

யாழில் புலிக்கு படையெடுப்பு

இன்றைய தினம் நடிகர் விஜயின்  புலி திரைப்படம் உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த திரைப்படம் ராஜா, மெஜெஸ்டிக் கொம்பிளக்ஸ் தியேட்டர்களில் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிகாலை முதலே அதிகளவான ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்தனர்.
ஆனாலும் குறித்த நேரத்துக்கு திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.பின்னர் புலித்திரைப்படம் திரையிடப்பட்டதால் ரசிகர்களின் கொந்தளிப்பு குதூகலிப்பாக மாறியது.