பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2015

நேதாஜி உயிருடன் தான் இருக்கிறார்...ஆதாரங்களை வெளியிட்டு முகத்திரையை கிழிப்பேன்: வைகோ


நேதாஜி இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று மதிமுக பொதுச்செயலலாளர் வைகோ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நேதாஜி பிரகடன பொதுக்கூட்டம் ஓபுளாபடித்துறையில் நடந்தது.
இதில் பேசிய வைகோ, நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டதால்தான் மேற்குவங்க முதல்வர் மம்தா, நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட முன்வந்தார்.
ஆனால், ரஷ்யா அனுப்பிய நேதாஜியின் ஆவணங்களை மத்திய அரசு ஏன் இன்னும் மறைத்து வருகிறது என்று தெரியவில்லை.
காங்கிரஸ் அரசு மறைத்துபோல் பா.ஜ.க. அரசும் மறைக்க முயற்சிக்கிறது. நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்ற ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
மத்திய அரசு வெளியிடவில்லை என்றால், அந்த ஆதாரங்களை நான் வெளியிட்டு அனைவரின் முகத்திரையை விரைவில் கிழிப்பேன், இந்த ஆவணங்களில் பல உண்மைகள் வெளிவரும் என்று கூறியுள்ளார்.