பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2015

நடிகர் வடிவேலுவை காணவில்லை - நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு

நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் நடிகர் வடிவேலு காணவில்லையா. இப்படியொரு பீதியை கிளப்பிவிட்டுள்ளார் சரத்குமாரின் சமத்துவ
கட்சியை சேர்ந்த ஒருவர். நடிகர் சங்க தேர்தல் வரும் 18ம் திகதி நடைபெறும் நிலையில், நடிகர் வடிவேலு நாமக்கலில் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், நடிகர் சங்கத்தை காணோம் அதைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று பேட்டியளித்தார்.
இதை தொடர்ந்து நடிகர் சங்க உறுப்பினர் ராஜேந்திரன் என்பவர் நாமக்கல்லில் உள்ள முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வடிவேலு மீது வழக்கு தொடுத்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த தியாகு என்பவர் நேற்று வடிவேலுவுக்கு எதிராக சென்னை நகரில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார்.
இதை பார்த்த பலரும் சினிமா நடிகர்கள் இடையே சண்டை முற்றி விட்டதா என்று பேசிகொண்டே போகின்றனர்.