பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2015

குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கே.பிக்கு எதராக சட்டத்தை செயற்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரதினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்  புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவரான குமரன் பதமனாதன் எனப்படும் கே.பீ. தொடர்பில் 4 அறிக்கைகளை சட்டமா அதிபர் நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த அறிக்கையை ஆய்வு செய்ததன் பின்னர் மனுதாரர்களின் கருத்தினை அறிந்துகொள்வதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.