பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2015

சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்தி வரும் உதைபந்தாட்டத் தொடர

சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகம் வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ். மாவட்ட ரீதியாக நடத்தி வரும் உதைபந்தாட்டத்
தொடரில் வாழ்வா? சாவா? ஆட்டத்தில் உடுப்பிட்டி யுத் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டது மானிப்பாய் றெட்றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் மானிப்பாய் றெட்றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகமும் உடுப்பட்டி யுத் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின. தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறவேண்டும் என்பதால் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்கின.
உடுப்பிட்டி யுத் அணியின் பின் வரிசை பலவீனமாக இருந்ததனால் முதல்பாதி முடிவதற்குள் மூன்று கோல்களை அடித்து தமது வெற்றியைகிட்டத்தட்ட உறுதி செய் தது றேஞ்சர்ஸ். தமக்கே உரிய போராட்டப் பாணியில் இரண்டாம் பாதியில் வீறு கொண்டெழுந்தது உடுப்பிட்டி யுத். 15ஆவது மற்றும் 17 ஆவது நிமிடங்களில் உடுப்பிட்டி யுத் அணி யின் ஜோன்சன் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தார். இருப்பினும் றேஞ்சர்ஸிடம் இருந்து வெற்றியைப் பறித்தெடுக்க முடிய வில்லை. முடிவில் 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது றெட்றேஞ் சர்ஸ்.