பக்கங்கள்

பக்கங்கள்

19 அக்., 2015

நடிகர் சங்க கட்டட ஒப்பந்தம் ரத்து : 
சரத்குமார் பேட்டி

நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றது.  இதையடுத்து நடிகர் சங்க தலைவராக இருந்து வந்த சரத்குமார், நடிகர் சங்க கட்டட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

முறைகேடு புகாரால் எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை ஏற்கனவே ரத்து செய்துவிட்டதாக நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்தார். கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதியே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட ஆவணத்தை முறையாக நடிகர் சங்கத் தலைவரிடம் அளிக்க உள்ளதாகவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
 
தன் மீதான முறைகேடு புகார்கள்,  மனதை அதிகம் காயப்படுத்தியதாகவும், அத்தகைய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் நடிகர் சரத்குமார் விளக்கம் அளித்தார்.15 ஆண்டு காலத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளதாகவும், வெற்றி தோல்வியை வாழ்க்கையில் பல முறை சந்தித்து விட்டதாகவும் அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்