பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2015

டக்ளஸ் தேவானந்தா வீடியோ கொன்பரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார்


தமிழக சூளைமேடு கொலை வழக்கில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் காணொளி நேரலை(video conferenc) மூலம் சாட்சியம் அளிக்கவுள்ளார்.
1987ஆம் ஆண்டு அதாவது 28 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பில் இலங்கையின் அமைச்சர் தமிழகத்துக்கு வருவதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதை அடுத்தே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுவிப்பு அல்லாத பிடியாணை ஒன்று இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே வீடியோ கொன்பரன்ஸ் வாக்குமூலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை