பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

மனித உரிமைகள் கண்காணிப்பக தலைவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்


மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் பிரட் எடெம்ஸ் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு தரப்பினரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
முக்கியமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான பிரேரணையின் பின்னரான விடயங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டன.
அத்துடன் இலங்கையில் பயிற்சித்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதன்போது விருப்பத்தை வெளியிட்டது.