பக்கங்கள்

பக்கங்கள்

31 அக்., 2015

சுங்கத்திணைக்கள உயரதிகாரிகள் மூவர் கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பியோட்டம்


பன்னிரண்டரைக் கோடி லஞ்சம் சம்பவத்துடன் தொடர்புடைய சுங்கத்திணைக்களத்தின் உயரதிகாரிகள் மூவர் கடல்மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பியோடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லஞ்சத் தொகையான பன்னிரண்டரைக் கோடி லஞ்சம் பெற முயன்ற சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளே இவ்வாறு இந்தியாவுக்குத் தப்பியோடியுள்ளனர்.
குறித்த சுங்க அதிகாரிகள் மூவரையும் கைது செய்து விசாரணைக்குட்படுத்துவதற்காக பொலிசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது இத்தகவல் தெரிய வந்துள்ளது.
குறித்த சுங்கத்திணைக்கள அதிகாரிகள் அதிவேகப் படகு ஒன்றைப் பயன்படுத்தி கடல்மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச்சென்றுள்ளமை குறித்தும் பொலிசாருக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.