பக்கங்கள்

பக்கங்கள்

13 அக்., 2015

: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,  தனது காலில் தன்னை விட வயதில் மூத்த பெண்கள் விழுந்து வணங்கியதை
வேடிக்கை பார்த்தார் என்று பரவியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகம் முழுக்க நமக்கு நாமே-விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்.அண்மையில், தன்னுடன் செல்பி போட்டோ எடுக்கவந்த போது ஆட்டோ டிரைவரை அடித்து விட்டார் என்று செய்திகள் வெளி வந்தன. பின்னர் அதற்கு விளக்கம் அளித்த ஸ்டாலின், அந்தச் செய்தி தவறானது என்றும், வெளிவந்த போட்டோ, கிராபிக்ஸ் என்றும் கூறினார்.

இந்நிலையில், ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் நேற்று மேற்கொண்ட பயணத்தின்போது, தன்னைவிட வயதில் மூத்த பெண்களை காலில் விழுந்தபோது அதனை தடுக்காமல் வைத்து வேடிக்கை பார்த்தார் என்று செய்திகள் பரவி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 
இந்த பெண்கள் ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுக்க வந்தவர்கள் என்றும், அவர்களை ஸ்டாலின் காலில் விழுந்து வணங்குமாறு அருகில் நின்ற திமுகவினர் கட்டாயப்படுத்தினர் என்றும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா காலில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் விழுந்து வணங்குவதை திமுக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது ஸ்டாலின் தனது காலில் விழுந்த பெண்களை தடு