பக்கங்கள்

பக்கங்கள்

31 அக்., 2015

ஜே.வி.பி.யினர் அம்பலாங்கொடையில் சத்தியாக்கிரகம்


ஜே.வி.பி. கட்சியின் காலி மாவட்ட முக்கியஸ்தர்கள் அம்பலாங்கொடையில் நேற்று முதல் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த மஹிந்த ராஜபக்ச அரசின் பதவிக்காலத்தில் அம்பலாங்கொடை நகர சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் சந்திரதாச நாய்துவாவடு என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இக்கொலை குறித்து முறையான விசாரணை முன்னெடுக்கப்படாத அதே நேரம், முன்னைய அரச தரப்பின் முக்கியஸ்தர்கள் இக்கொலையில் தொடர்புபட்டிருப்பதாக பரவலான தகவல்கள் கசிந்திருந்தன
இந்நிலையில் சந்திரதாசவின் மரணம் குறித்து நியாயமான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமாறு கோரிக்கை விடுத்து காலி மாவட்ட ஜே.வி.பி. முக்கியஸ்தர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.