பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2015

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக யாரிடமும் சமரசம் செய்ய மாட்டேன்: விஷால் பேட்டி



நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக யாரிடமும் சமரசம் செய்ய மாட்டேன் என்று விஷால் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, நடிகர் சங்க தேர்தலில் அனைவரும் வந்து ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே அனைவரையும் சந்தித்து ஓட்டு போட வரும்படி வற்புறுத்தி வருகிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் சங்க தேர்தல் நடக்கிறது. நாடக நடிகர்கள் உள்பட அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே எங்கள் அணி இதில் போட்டியிடுகிறது.

நாங்கள் சந்தித்த போது நாடக நடிகர்கள் அனை வரும் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி இருக் கிறார்கள். அவர்கள் யாரை யும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க மாட்டோம். அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து உதவி செய்வோம்.

கமலஹாசன் தமிழகத் துக்கு மட்டுமல்ல. இந்திய சினிமாவுக்கே முக்கியமான வர். அவரை சந்தித்து ஆதரவு கேட்டோம். அதை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார். நடிகர் சங்கத்தை அவர் பிரிக்கப் பார்ப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. அவரை யாரும் விமர்சிப்பதை ஏற்க முடியாது.

விஜயகாந்த் சாரையும் சந்தித்தோம். ஓட்டுப்போட வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். நிச்சயம் வருவதாக கூறி னார். நல்லவர்களுக்கு ஓட்டுப்போடுவேன் என்று சொல்லி இருக்கிறார். நான் அவருடைய ரசிகன். அவர் யாருக்கு ஓட்டுப்போடுவார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

வருகிற 18ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அது நிச்சயம் நடக்கும். இது நேர்மையான தேர்தலாக இருக்கும். நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக யாரிடமும் சமரசம் செய்ய மாட்டேன். அனைவரும் ஓட்டுப் போட வேண்டும். நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அனைவரையும் ஓட்டுப்போட வற்புறுத்தி வருகிறோம் என்றார்