பக்கங்கள்

பக்கங்கள்

12 அக்., 2015

இறுதி ஆட்டத்திற்கு ஆனந்தா தகுதி

02
நடப்பு வருடத்தின் முரளிக் கிண்ணத் தொடர் கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. இந்தத் தொடரில் கிளிநொச்சி
மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் சேனநாயக்க கல்லூரியை 6 இலக்குகளால் இலகுவாக வீழ்த்தி இறுதிக்குச் சென்றது ஆனந்தாக் கல்லூரி.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சேனநாயக்க கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானிக்க ஆரம்ப வீரர்களாக விஜயசேகர மற்றும் ரட்நாயக்க. விஜயசேகரவின் அதிரடி மூலம் கிடைக்கப்பட்ட ஓட்டங்கள் ரட்நாயக்க அதிகப்படியான பந்துகளை வீணடித்ததன் மூலம் சரிசெய்யப்பட்டது.
மொத்தத்தில் இலக்குச் சரிவு ஏற்படாமல் இருந்தமை ஒன்றே சேனநாயக்கவுக்கு சாதகமாக அமைந்திருந்தது. அரைச்சதம் கடந்து விடை பெற்றார் விஜயசேகர. தற்பொழுது அணியின் ஓட்ட எண்ணிக்கை 89. ரட்நாயக்கவும் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரைத் தவிர வேறெந்த வீரர்களும் நிலைக்கவில்லை. ஜெயலத்தின் பந்தில் திக்குமுக்காடி ஒருவர் பின் ஒருவராக பவிலியன் சென்று கொண்டிருந்தனர். 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சேனநாயக்க கல்லூரி அணி 146-7. பந்துவீச்சில் ஆனந்தா கல்லூரி அணி சார்பாக ஜெயலத் 5 இலக்குகளை யும் எரங்க, அஞ்சுல இருவரும் தலா ஓர் இலக்கையும் வீழ்த்தினர்.
எட்டக்கூடிய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆனந்தாக் கல்லூரிக்கு முன்னிலை வீரர்கள் எவரும் நிலைக்கவில்லை. ஆரம்ப வீரர்கள் உட்பட முன்வரிசை வீரர்கள் எவரும் நிலைக்கவில்லை. தற்பொழுது ஆனந்தா 46-4. வெற்றியின் விளிம்பில் இருந்த சேனநாயக்க கல்லூரியிடம் இருந்து வாய்ப்பை பறித்து வந்தார்கள் கக்கல்ல மற்றும் அஞ்சுல 46 ஓட்டங்களின் பின்னர் இலக்குகள் எவையும் வீழ்த்தப்படவில்லை. இணைப்பாட்டமாக 103 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றிக்கு வித்திட்டனர். அதிகபட்சமாக அஞ்சுல 56 ஓட்டங்களையும் கக்கல்ல 39 ஓட்டங்களையும் இறுதிவரை ஆட்டமிழக்காது குவித்தனர். பந்துவீச்சில் சேனநாயக்க கல்லூரி சார்பாக சில்வா, டானியேல் இருவரும் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினர்.