பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2015

புனேக்கு எதிரான கால்பந்து போட்டியில் சென்னை வெற்றி



சென்னை அணி, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் புனே அணியை எதிர்கொண்டது . உள்ளூரில் களமிறங்கிய சென்னை வீரர்கள் இந்த முறை வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் விளையாடினர். ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் சென்னை அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் மெண்டி கோல் அடித்து அசத்தினார். 

இரண்டாவது பாதி தொடங்கியவுடனேயே 48வது நிமிடத்தில் முன்கள வீரர் மெண்டோஸா கோல் அடிக்க அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது. 

புனே அணியால் 75வது நிமிடத்தில் ஒருகோல் அடிக்க மட்டுமே முடிந்தது. இறுதியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.