பக்கங்கள்

பக்கங்கள்

10 நவ., 2015

ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்கு பிரதமர் தலைமையில் குழு [ செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2015, 08:24.37 AM GMT ] ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர. டி.எம்.சுவாமிநாதன், விஜேதாஸ ராஜபக்ச மற்றும் மனோ கணேசன் ஆகியோர் உள்ளடக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர. டி.எம்.சுவாமிநாதன், விஜேதாஸ ராஜபக்ச மற்றும் மனோ கணேசன் ஆகியோர் உள்ளடக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.