பக்கங்கள்

பக்கங்கள்

3 நவ., 2015

100 பயணிகளுடன் சென்ற பாகிஸ்தான் விமானத்தின் டயர் வெடித்து விபத்து

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாகூரில் விமானம் ஒன்று தரையிறக்கப்படும் போது
ஏற்பட்ட விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 

பாகிஸ்தானில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று காலை கராச்சி விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. 

ஓடுபாதையில் ஓடி, உயரக்கிளம்பிய அந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

அவசரமாக தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதுடன் ஏனைய பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தையடுத்து, கராச்சி நகரில் இருந்து லண்டன், பாரிஸ், மிலன், இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.