பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2015

மீன்களால் இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் நட்டம்: அமரவீர


ஐரோப்பியாவினால் மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை எதிர்வரும் ஆண்டு முதல் நீக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய கடற்றொழில் தினத்தை முன்னிட்டு சிலாபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
மேலும், இந்திய மீனவர்களினால் இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் இதுவரை நிறைவடையவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினைக்கு இந்திய மீனவர்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை என தெரிவித்த அமைச்சர், தமிழக அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.