பிரான்சில் 2016ம் ஆண்டு ஜூன் 10ம் திகதி முதல் ஜூலை 10ம் திகதி வரை ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.
அல்பானியா 24 அணிகள் மட்டுமே விளையாடும் இந்த போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள், கடந்த செப்டம்பர் 7ம் திகதி தொடங்கியது.இதில் ஒன்பது குழுக்களில் வகுக்கபட்டிருந்த
53 நாடுகள் கலந்து கொண்டன. முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களை பிடித்த பதினெட்டு நாடுகளும் மூன்றாம் இடிந்த நாடுகளில் அதி சிறந்த ஒரு நாடுமாக நேரடியாக தெரிவாகின மூன்றாம் இடத்தை அடைந்த மிகுதி எட்டு நாடுகளும் நன்கு ஜோடிக்லாக்கபோட்டு பிளே ஆப் முறையில் இரண்டு போட்டிகளில் ஆடி வென்ற நான்கு நாடுகளான அயர்லாந்து கங்கேரி ஸ்வீடன் உக்ரைன் ஆகியனவும் தகுதி பெற்றன .இவாறாக 23 நாடுகளோடு போட்டிகளை நடத்தும் விருந்தினர் நாடான பிரான்சும் தகுதிகன் போட்டிகளின்றி நேரடியாக வந்து சேர மொத்தம் 24 நாடுகள் பங்குபற்றவுள்ளன இவை ஆறு குளுக்க்சலில் தலா நான்கு நாடுகள் வீதம் அதிரவரும் 12 ஆம் திகதி சீடிளுப்பு மூலம் வகுக்கப்படும் . தரநிலை அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்து ஒவ்வொரு நாடுகள் தெ ரிவாகும் தரநிலை பகுப்பு கீழே உள்ளது நடத்துகின்ற நாடான பிரான்ஸ் குழு ஏ முதலாம் இடத்தில வைக்கப்படும் சின்னஞ்சிறிய நாடான சுவிஸ் தரநிலையில் இரண்டாம் இடத்தில உள்ளது பலமிக்க நாடான ஹோல்லந் தகுதி பெற முடியாமல் வெளியேறியது
தரநிலை 1
ஜெர்மனி பிரான்ஸ் பெல்ஜியம் இங்கிலாந்து ஸ்பெயின் போர்த்துக்கல்
தரநிலை 2
சுவிற்சர்லாந்து, ரஷ்யா ,இத்தாலி,உக்ரைன்,ஆஸ்திரியா,குரோஷியா
தரநிலை 3
செக்.குடியரசு,ருமேனியா,போலந்து,ஸ்வீடன்,ஹங்கேரி,ஸ்லோவாக்கியா
தரநிலை 4
துருக்கி,ஐஸ்லாந்து,வட அயர்லாந்து,அயர்லாந்து,வேல்ஸ்,அல்பேனியா
ஏற்கனவே 20 அணிகள் தெரிவான நிலையில் கடைசி நான்கு இடங்களுக்கான பிளேஆப் சுற்றுகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் டென்மார்க்கை வீழ்த்திய ஸ்வீடனும், ஸ்லோவேனியாவை வீழ்த்திய உக்ரைனும் தகுதி பெற்றன.
மேலும் நார்வேயை தோற்கடித்து ஹங்கேரியும், போஸ்னியாவை தோற்கடித்து அயர்லாந்தும் தகுதி பெற்றன.
பங்கேற்கும் அணிகள்
பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், வேல்ஸ், ருமேனியா, இங்கிலாந்து, செக்.குடியரசு, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, வட அயர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்விட்ஸர்லாந்து, அல்பேனியா, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, ஸ்லோவே கியா, குரோஷியா, துருக்கி, ஹங்கேரி, ஸ்வீடன், உக்ரைன்.
|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼