பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2015

தென்னாபிரிக்கா முதல் இனிங்சில் 214 ஓட்டங்கள்

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள்
ஆட்டம் இன்று நிறைவு பெற்றது.

போட்டியில், தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி இன்றைய முதலாம் நாள் ஆட்டம் நிறைவடையும் வரை 22 ஒவர்கள் நிறைவில் விக்கட் இழப்பின்றி 80 ஒட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 214 ஒட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்பாக தமது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆப்ரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ் 85 ஒட்டங்களை பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக ரவிந்திர ஜடேஜா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா நான்கு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.