பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2015

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி காலத்தில் சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவில் இருந்து 97 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்து கொண்டதாக தெரியவந்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதிக்கான மாத சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவில் இருந்து 97 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
2006 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி அவர் தனது சம்பளத்தை அதிகரித்துக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாகவே மகிந்த ராஜபக்சவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் வழங்கப்படும் ஓய்வூதியத்தில் ஏற்றதாழ்வு இருந்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாளாந்தம் 2 கோடியே 50 லட்சத்திற்கும் மேலதிகமான நிதியை செலவுக்காக ஒதுக்கி கொண்ட நிலையிலேயே மகிந்த ராஜபக்ச தனது மாத ஊதியத்தை அதிகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவையே சம்பளமாக பெற்றுள்ளதுடன் ஓய்வுபெற்ற பின்னர் அந்த தொகை முழுமையாக ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஓய்வூதியத்தை 97 ஆயிரத்து 500 ரூபா அதிகரிக்கும் யோசனை ஒன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதுடன் அந்த யோசனை தொடர்பில் இந்த வாரம் கலந்துரையாடப்பட உள்ளது.