பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2015

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் இலவச வேட்டி சேலை



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.
 
நடிகர் சங்க கட்டடம் இருந்த இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள இலவசவேட்டி சேலைகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்டோர் வழங்கினர்.
 
சங்கத்தில் வாக்குரிமை உள்ள, இல்லாத உறுப்பினர்கள் என அனைவருக்கும் வழங்கப்படுகின்றன. மிக பிரபலமான முன்னணி நடிகர்களுக்கில்லாமல், நலிவடைந்த கலைஞர்களுக்கு மட்டும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் 2000 கலைஞர்களுக்கும், கோவை, மதுரை , புதுக்கோட்டை உள்ளிட்ட மற்ற மாவட்டக் கலைஞர்களுக்கும் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.
 
கோவை மாவட்ட கலைஞர்களுக்கு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் கோவை சரளா நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மதுரை மாவட்டக் கலைஞர்களுக்கு துணைத்தலைவர் கருணாஸ் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்