பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2015

யாழ் சாரங்கா நகைமாடக் கட்டடத்தில் விபச்சாரம்! இளைஞர்கள் சுற்றிவளைப்பு (2ஆம்இணைப்பு



யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் உள்ள கட்டத்தில் இடம்பெற்று வந்த விபச்சார நடவடிக்கைகளுக்கு இன்று இளைஞர்களால்
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
யாழ் சாரங்கா நகைமாட உரிமையாளருக்குச் சொந்தமான கட்டடத்திலேயே இந்த விபச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.
இது தொடர்பாக இளைஞர்கள் எடுத்த நடவடிக்கை காரணமாக இன்று காலை விபச்சார விடுதி இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்ட போது அந்த விடுதியில் தங்கியிருந்த இளம் ஜோடிகள் பிடிக்கப்பட்டனர். 
குறித்த விடுதி காலையி்ல் சுற்றிவளைக்கப்பட்ட போது அந்த விடுதியில் இருந்த சந்திரசேகரம் கோபி என்ற பெயருள்ள அடையாள அட்டை இலக்கம் 821481600V, மகேசன்வீதி நவாலியைச் சேர்ந்த 33 வயதான நபரும் உடுவில் தெற்கைச் சேர்ந்த 21 வயதாக யுவதியும் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டனர்.கோபி என்பவன் தச்சு வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளான். குறித்த விடுதிக்கு இரண்டாயிரத்து ஐந்நுாறு ரூபா செலுத்தி அறையைப் பெற்றுள்ளதாகவும் அவன் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
குறித்த யுவதி இளைஞர்களின் கால்களில் வீழ்ந்து கதறியதாகவும் தெரியவருகின்றது. கோபி என்ற குறித்த நபர் பல இளம் யுவதிகளை அதிகாலை வேளையில் அங்கு அழைத்து வந்து தங்க வைத்து தனது இச்சைகளைத் தீர்த்து வந்ததாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் மேலும் பல நபர்களும் அங்கு யுவதிகளைக் கூட்டி வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. நீண்ட காலமாக அப்பகுதி இளைஞர்கள் இதனை அவதானித்து வந்துள்ளார்கள். அதன் பின்னரே குறித்த கட்டடம் இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டது.
இன்னும் இவ்வாறு இயங்கும் பல விடுதிகளை இளைஞர்கள் பிடிக்க ஆயத்தமாக உள்ளதாகத் தெரியவருகின்றது.
2ஆம் இணைப்பு
சாரங்கா நகைகடை உரிமையாளர் பல தடவை சட்டரீதியற்ற குற்றச்செல்களில் சிறை சென்று பிணையில் விடுதலையானவர். ஒரு சில வழக்குகளும் தற்போது நிலுவையில் உள்ளதாக தெரியவருகிறது.
யாழ் குடாநாட்டில் இருந்து 22 கரட் தங்கங்களை இந்தியாவுக்கு இந்திய மீனவர்களை வைத்து கடத்தி இந்தியாவில் இருந்து தரங் குறைந்த தங்கங்களை கடல் வழியாக கடத்தி யாழ் குடா நாட்டில் அதனை அறவிலைக்கு விற்று தமிழ் மக்களை ஏழைகளாக்குதல், யாழ் குடாநாட்டில் திருடர்களால் களவெடுத்த நகைகளை முகவர்கள் ஊடாக மலிவு விலையில் வாங்கி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்தும் பழைய பவுன்களை அற விலையில் வாங்கி அதனை உருக்கி கொழும்புக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு வற்று பணம் சம்பாதித்தல், யாழ்பாணத்தில் சர்வதேச சட்டத்திற்கு முரணாக கவாலா எனப்படும் போலி பணப்பரிமாற்ற மோசடி வெளிநாட்டு பணங்களை போலி விலைக்கு பெறுமதி குறைந்து விட்டதாக பொய் சொல்லி குறைந்த விலையில் கொள்முதல் செய்து வியாபாரம் நடாத்தி பணம் சம்பாதித்தல்,
தனது கடைக்கு வரும் அப்பாவி தமிழ் மக்களுக்கு கொள்வனவுகளின்போது மிகுதி பணம் கொடுக்கும்போதும் பணத்தை மாற்றி கொடுக்கும்போதும் போலி இலங்கை பணங்களை உண்மையான பணங்களுக்கு இடையே வைத்து கொடுத்தல்,
யாழ்பாணத்தில் இருந்து பயணிகள் பேருந்து ஓடுதல் என்ற போலி முகத்துடன் பேருந்துக்குள் நகை கடத்தல் வெளிநாட்டு நாணயம் கடத்தல். இவருடைய பேருந்தில் ஓரம் இலக்க இருக்கை சாரங்கா உரிமையாளருக்கு ஒதுக்கபட்டுள்ளது என்றால் அன்று அந்த பஸ்சில் 4 கோடி பெறுமதியான பணம் மற்றும் தங்கம் அந்த பஸ்சில் கடத்தபடுகிறது என்று நீங்கள் அனைவரும் நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.
தனது நகைகடை வாசலில் பயணிகள் பேருந்தை நிறுத்தி தனது நகைகடைக்குள் இருந்து அதை பேருந்தில் ஏற்றி கொழும்பில் உள்ள நகைகடை ஒன்றுக்குள் அதை இறக்கி கடத்தல் செய்தல். என்று இவர் தொடராக செய்து வரும் நடவடிக்கைகள் அடுக்கிகொண்டே போகலாம்.
அதற்கும் அப்பால் தமது கட்டிடங்களை வைத்து வேறு பெயர்களில் விடுதிகளை வைத்து நடாத்தி அங்கு விபச்சாரம் செய்தல் போன்ற கேடுகெட்ட வேலைகளில் சாரங்க உரிமையாளர் யாழ் குடாநாட்டில் ஈடுபட்டு வருகின்றார் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
யாழ் குடா நாட்டு மக்கள் சாரங்கா நகைகடை தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். யாழ் குடாநாட்டில் மிகவும் மதிப்பும் மரியாதையும் பண்பும் தன்னடக்கமும் உடைய பொலிஸ் பொறுப்பதிகாரி வூட்லர் கடமையாற்றுகிறார்.
இலங்கையில் பொலிஸ் வரலாற்றில் இவரைபோன்ற ஒரு சமூக சந்தனையாளனையும் அனுபவம் உள்ள அதிகாரியையும் இலங்கை இன்னொரு பிறப்பில்கூட பெற்றுக்கொள்ள முடியாது.
இதற்கும் அப்பால் இவரை யாழ் குடா நாடு யாழ் நகரத்தை பாதுகாக்க கிடைத்துள்ளது ஒரு இறைவன் கொடுத்த கொடையாக யாழ் குடாநாட்டு மக்கள் கருதவேண்டும்.
இதற்கும் அப்பால் யாழ் குடாநாட்டில் மிகவும் அறிவுள்ள நாட்டு பற்றுள்ள சமூக உணர்வுள்ள நீதிபதிகள் உள்ளார்கள். இவர்கள் இத்தகைய சீரழிவுகளை தடுக்க முன்வரவேண்டும் என்று யாழ் குடா நாட்டு மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
-