பக்கங்கள்

பக்கங்கள்

10 நவ., 2015

ஆரம்ப ஏலம் ரூ.40 கோடி: ஐபிஎல் அணியை வாங்குகிறார் தாேனி?

டிசம்பர் 8ம் தேதி புதியதாக ஏலம் விடப்பட உள்ள ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்
தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த இரு அணிகளுக்கும் பதிலாக புதிய அணிகளை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. புதிதாக சேர்க்கப்படும் 2 அணிகள் குறித்த விவரம் டிசம்பர் 8-ம் தேதி தெரிய வரும். ஏனெனில் அன்றைய தினம்தான் புதிய அணிகள் தேர்வு குறித்து ஏலம் நடக்கிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்று வர்ணிக்கப்படும் தோனி, ஐபிஎல் அணி ஒன்றை வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன.

தோனியை தவிர கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவும் ஐபிஎல் அணி ஒன்றை வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
புதியதாக ஏலம் விடப்படும் இரண்டு அணிகளுக்கும் அடிப்படை தொகையாக 40 கோடி ரூபாய் விலை நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.ஆரம்ப ஏலம் ரூ.40 கோடி: ஐபிஎல் அணியை வாங்குகிறார் தாேனி?