பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2015

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 
 
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 8ம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரும் தமிழ் சிறைக்கைதிகளில் நிலைமை மோசமடைந்ததினால் இன்று ஐந்து பேர் அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஆறாவது நாளாக உணவுதவிர்ப்பு போராட்டம் தொடரும் நிலையிலேயே குறித்த ஐந்து கைதிகளின் உடல்நிலை பாதிப்படைந்ததினால் அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இவர்களின் இருவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு,
மார்க்கண்டு சிவநாதன் - வவுனியா
கந்தையா குகநாதன்  -  வவுனியா
ராகவன் சுரேஸ்   -   வவுனியா
ராசதுரை ஜெகன்   -   யாழ்ப்பாணம்
புருசோத்தமன் அரவிந்தன்  -   யாழ்ப்பாணம்