பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2015

பாரிஸ் சென்ட் டெனிஸ் பகுதியில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை


பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள செய்ன் டெனிஸில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாரிஸில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் இதன்போதே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாகவும் தெரிவிக்கின்றன.
மேலும் அங்குள்ள கட்டடமொன்றை பெருந்தொகையான படையினர் சுற்றிவளைத்துள்ளதாகவும், அதனுள் இருந்து துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக த காடியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிந்திக் கிடைத்த தகவல்களின் படி பாரிஸ் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் சூட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.