பக்கங்கள்

பக்கங்கள்

3 நவ., 2015

யாழ்.உடுவில் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு


யாழ்.உடுவில் மகளிர் கல்லூரியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த வயதான பெண் ஒருவர் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பாலசிங்கம் சிறீதேவி (வயது67) என்ற பெண் குறித்த வீடொன்றில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்றைய தினம் தொடக்கம் அவரின் நடமாட்டத்தை காணாத அயலவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை பொலிஸார் வீட்டை சோதனை செய்தபோது கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் குறித்த வயதான பெண் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் வீட்டை சோதனையிட்டபோது வீட்டின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு காணப்பட்டதுடன், வீட்டின் பின்புற கதவும் திறந்து காணப்படுகின்ற நிலையில் கொள்ளை முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் மல்லாகம் நீதிபதி சம்பவம் தொடர்பாக இன்று இரவு விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.