பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2015

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது


அபுதாபியில் இருந்து நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் போலியான கடவுச் சீட்டை பயன்படுத்தி கிரேக்கம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அபுதாபியின் குடிவரவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர்கள், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதன் பின்னர், இரகசிய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு இளைஞர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.