பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2015

பாரிஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண் தீவிரவாதி பற்றி புதிய தகவல்


பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 8 தீவிரவாதிகளில் ஒருவரான பெண் தீவிரவாதி அஸ்னா பவுலாச்சன் பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது. 26 வயதான அவர் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, வெடிக்க செய்ததால் உயிரிழந்தார்.

அவரது கைப்பையில் இருந்த பாஸ்போர்ட் விவரங்களை ஆராய்ந்தபோது, தன்னிச்சையாக வாழ்ந்து வந்த பெண் என்று தெரிய வந்தது. இரவு விடுதிகளில் சுற்றி வந்த இந்த பெண்ணை காணவில்லை என்று 10 நாட்களாக அவரது தாய் தேடி வந்த நிலையில், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பலியானது தெரிய வந்தது. பதிவான கேமரா காட்சிகளை வைத்து, குரலை சோதித்து பலியானது தனது பெண் தான் என்று அஸ்னாவின் தாய் உறுதிப்படுத்தியுள்ளார்.