பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2015

வெளிநாட்டு ராஜதந்திரிகளை குறி வைக்கும் மஹிந்த அணியினர்


இலங்கையில் கூட்டு எதிர்க்கட்சி என்று தம்மை அழைக்கும் மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர் நேற்று ரஷ்ய சம்மேளனத்தின் தூதுவரை சந்தித்தனர்.
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சம் குறித்து இதன்போது தாம் ஆராய்ந்ததாக குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளமையையும் இதன்போது கூட்டு எதிர்க்கட்சியின் பொறுப்பு தொடர்பாகவும் தாம் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது பீரிஸீடன் உதய கம்மன்பில மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோரும் பங்கேற்றனர்
இதேவேளை தொடர்ந்தும் இந்தக்குழுவினர் ஏனைய நாட்டு பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.