பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2015

அவுஸ்ரேலியாவில் சுமந்திரனுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்


அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தமிழ் மக்கள்
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது “துரோகி சுமந்திரனே வெளியேறு” என்றும் தமிழ் மக்களிடம் மன்னிப்புகோருமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.
இதன்போது இந்தக்கூட்டத்தை ஏற்ப்பாடு செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவுஸ்திரேலியா அமைப்பு மற்றும் தமிழ் காங்கிரஸ் ஆகியன பொலிசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைவெளியேற்றினர்.
தமிழ் அமைப்புக்களின் இந்தசெயலானது தமிழ் உணர்வாளர்கள் மீது பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழனுக்கு தமிழன் கொடுத்த காட்டடி என பலராலும் பேசப்படுகின்றது.
இந்த மோதலைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மிகக்குறைந்த அளவிலான மக்களுக்கு சுமந்திரன் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.அவுஸ்ரேலியாவில் சுமந்திரனுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்