பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2015

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி


சிலாபம், ஆனவிதுலுந்தாவ, துருவில வாவியில் குளிக்க சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாவியில் குளிக்க சென்ற தந்தை, மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகனுமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
40 வயதுடைய எச்.கே.சுமித்ர பிரியலால், 16 வயதுடைய சானக சந்தருவன் மற்றும் 17வயதுடைய ரவிக துனன்ஜன என்ற மூவரே நீரில் மூழ்கி உயிரிந்துள்ளனர்.