பக்கங்கள்

பக்கங்கள்

27 நவ., 2015

ஐக்கிய தேசிய கட்சியுடன் மோதல் கிடையாது! சுதந்திரக்கட்சி உத்தரவாதம்


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று சுதந்திரக்கட்சி உத்தரவாதமளித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான சந்திம வீரக்கொடி மற்றும் விஜிதமுனி சொய்சா ஆகியோர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போது சுதந்திரக்கட்சியும், ஐ.தே.க. வும் தனித்தனியாக போட்டியிடவுள்ளது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மோதலில் ஈடுபடபோவதில்லை என்று சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதனை மீறி தனிப்பட்ட ரீதியில் வேட்பாளர்கள் எவரும் மோதல் போக்கில் ஈடுபட்டால் அதற்கு கட்சி பொறுப்பாக மாட்டாது. அதுகுறித்து பொலிஸாரும், நீதிமன்றமும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அமைச்சர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.