பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2015

யாழ். இந்து மாணவி முதலிடம்

யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கத்தின் பெண்கள் பிரிவு 10வயது வீராங்கனைகளுக்கான தரப்படுத்தலில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை
மாணவி ஜெனனி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவி ஜெனனி 25 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி நிசானி 20 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், அதே கல்லூரியின் துசானி மற்றும் சோபிகா இருவரும் முறையே மூன்றாம் நான்காம் இடங்களையும் பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி மகா வித்தியலாய மாணவிகளான குகாயினி, யென்சிகா, அருள்விழி, ஆதித்தியா நால்வரும் காலிறுதிக்கு முன்னேறி அடுத்த அடைவு மட்டத்தில் உள்ளனர்.