பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2015

ரவிராஜின் கொலை….! சந்தேகநபரை நாடு கடத்தும் சுவிஸ்.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் முக்கியமானவராக சந்தேகிக்கப்படும் சரண் என்று அழைக்கப்படும் சிவகாந்தன் விவேகாநந்தனை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சரண் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை அந்த நாட்டில் இருந்து நாடு கடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2006ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ரவிராஜின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் இலங்கையின் சீஐடியினர், பிரித்தானியாவின் ஸ்கொட்லான்ட் யாட் பொலிஸாரின் உதவியை பெற்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்படி அந்த பொலிஸாரே தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: http://www.tamilsunity.com/2015/11/blog-post_57.html#ixzz3qF7OqeZi
Hey Be Cool............!!
Follow us: @tamilsunity on Twitter | Tamilsuniti on Facebook