பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2015

நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், தமிழ் ஊர்களின் பெயர்களையும் அகற்றுவதாக இராவணாபலய அமைப்பு


யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் ஊர்களின் பெயர்களையும் தாம் அகற்றுவதாக இராவணாபலய அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்கும் வகையில் இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு இன்று சென்றிருந்தது.
எனினும், ஜனாதிபதியை இன்று சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் இராவணாபலய அமைப்புக்கு வழங்கப்பட்டது.