பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2015

சென்னை : சுரங்க பாதையில் தண்ணீரில் மூழ்கிய அரசு பேருந்து பத்திரமாக மீட்பு




சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அரங்கநாதன் சுரங்க பாதையில் தண்ணீரில் மூழ்கிய மாநகர பேருந்து மீட்கப்பட்டது. 

சென்னை கே.கே.நகர் பணிமனையில் இருந்து மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுடன் திருவான்மியூர் சென்ற மாநகர பேருந்து, திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் சுரங்கப்பாதையிலுள்ள மழை நீரில் சிக்கியது.
 
தொடர் மழை காரணமாக, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த நீரின் அளவு அதிகரித்ததால் பேருந்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. தண்ணீரை முழுமையாக வெளியேற்ற முடியாத சூழலில் பேருந்து முழுகியது. பின்னர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களின் உதவியுடன் பேருந்து மீட்கப்பட்டது.