பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2015

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகளை விடுதலை செய்ய முடியாது

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகள் விடுதலை செய்யப்படுவதனை உறுதி செய்ய முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, தற்போது சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் விடுதலை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் கடந்த கால குற்றநச் செயல்கள் தொடர்பில் அது அமுல்படுத்தப்படாது எனவும் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அதன் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.