பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2015

முல்லைத்தீவில் கர்ப்பிணி பெண்ணுக்கு இரத்தானம் செய்த இராணுவத்தினர்


முல்லைத்தீவு மாஞ்சோலை அரச வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த 34 வயதான பெண்ணுக்கு இராணுவத்தினர் இரத்ததானம் செய்து காப்பாற்றியதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான பெண் கடந்த 19 ஆம் திகதி குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
அந்த பெண் மகப்பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இரத்தம் தேவைப்பட்டுள்ளது.
அப்போது இரத்தன வங்கியில் சேவையாற்றும் மருத்துவர் அப்சரா, அருகில் உள்ள இராணுவ முகாமான 592 வது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான டப்ளியூ.எம்.ஜி.சீ.பீ. விஜேசுந்தரவிடம் உதவி கோரியுள்ளார்.
கோரிக்கை பதிலளித்த கட்டளை அதிகாரி,
ஒரு அதிகாரி மற்றும் 7 இராணுவத்தினர் ஊடாக பெண்ணுக்கு தேவையான 750 மில்லி லீற்றர் இரத்தத்தை தானமாக பெற்றுக்கொடுத்துள்ளார்.
இரத்த தானத்தை அடுத்து பெண் பாதுகாப்பாக பிள்ளையை பெற்றெடுத்துள்ளதுடன், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை மற்றும் தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.