பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2015

விசாரணைக்கு சென்ற மகிந்தவின் புதுவித குற்றச்சாட்டுக்கள்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரங்களுக்கான கட்டணத்தைக் கணக்கிடுவதில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் தவறிழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பான மஹிந்த ராஜபகசவின் தேர்தல் விளம்பரங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தவில்லை என்று பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் சமுகமளித்திருந்தார்.
இதன்போது மஹிந்த சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரபன, மஹிந்த ராஜபக்ச சார்பில் சுயாதீன தொலைக்காட்சி செலுத்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறாக சுமார் மூன்றரைக் கோடி ரூபாவுக்கும் மேலாக மஹிந்த சார்பில் செலுத்தப்பட்ட கட்டணம் வரவு வைக்கப்படவில்லை என்றும் ஆனால் அதற்கான செக் ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் மஹிந்த சார்பில் வாதிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது தொடர்பில் தெளிவான முடிவொன்றுக்கு வரும் வகையில் வழக்கின் விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.