பக்கங்கள்

பக்கங்கள்

10 நவ., 2015

அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணங்கும்: மனோ கணேசன்


பிணையில் விடப்பட அடையாளம் காணப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இணங்கும்.
இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையில் செயற்படும் குழுவில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி,
அடையாளம் காணப்பட்டுள்ள 32 தமிழ் அரசியல் கைதிகளின் சட்டத்தரணிகள் நாளைய தினம் நீதிமன்றில் முன்வைக்கும் பிணை கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும்படி சட்டமா அதிபர் திணைக்களம் தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இந்த அடிப்படையில் முதற்கட்டமாக 32 தமிழ் அரசியல்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று காலை, இந்த குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை மீள் உறுதி செய்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.