பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2015

நீர் வீழ்ச்சியில் குளித்தபோது அடித்து செல்லப்பட்டார் புதுமுக கதாநாயகன் பலி

தமிழில் தயாராகும் ‘காகாகா போ’ என்ற படத்தில், கதாநாயகனாக நடித்துள்ளவர் கேசவன் (வயது 26). இதில், கதாநாயகியாக சாக்ஷி
அகர்வால் நடிக்கிறார்.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் விஜய் டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த வாரம் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தநிலையில் கதாநாயகன் கேசவன் மலேசியாவில் உள்ள ஐபோ டி டோர் என்ற இடத்துக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அங்குள்ள நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த போது திடீரென்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார். கரையில் நின்ற அவரது பெற்றோர் அந்த காட்சியை பார்த்து அலறினார்கள். போலீசார் விரைந்து வந்து கேசவன் உடலை நீர்வீழ்ச்சியில் இருந்து மீட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

பலியான கேசவன் மலேசிய நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.