பக்கங்கள்

பக்கங்கள்

12 நவ., 2015

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா.வின் பிரதிநிதிகள் மன்னார் விஜயம்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள், இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளனர்.காணாமல் போனோர்களின் உறவினர்களை சந்தித்து தகவல்களை பெற்றுக்கொள்ள வருகை தந்துள்ளனர்.

மன்னார் கீரி ஞானோதய மண்டபத்திற்கு இன்று பி.ப 2 மணியளவில் வருகை தந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் 200 பேர் வரை ஞானோதய மண்டபத்திற்கு முன் ஒன்று கூடி காணாமல் போவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு காணாப்பட்டனர்.

இதன் போது வருகை தந்த 5 பேர் அடங்கிய ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள் காணாமல் போனவர்களின் உறவினர்களை பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்களின் குடும்ப பிரதிநிதிகள் 40 பேரிடம் குறித்த குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.