பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2015

தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை! விஜேதாஸ ராஜபக்ஸ


விசாரணைகள் ஏதும் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கக்கட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 30 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்படுவார்கள் என  நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ  தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றுது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நீதி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஏனைய 30 பேரை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.