பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2015

நிறைவேற்று அதிகாரம் தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது .
இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.