பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2015

கொழும்பு சிறைச்சாலைக்கு விக்னேஸ்வரன் திடீர் விஜயம்! கைதிகளின் நிலை குறித்து கவலை


உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கொழும்பு சிறைச்சாலைக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டு, அவர்களைப் பார்வையிட்டார்.
அங்கு தமிழ் அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான பிரச்சினையில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்குமோ என்ற சந்தேகம் இருப்பது குறித்து தாம் அரசியல் கைதிகளிடம் கூறியதாக வடக்கு முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் போராட்டத்தை  தொடரலாம் என அறிவுறுத்தியதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.