பக்கங்கள்

பக்கங்கள்

12 நவ., 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் இருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி நாளைய தினம்  வடக்கின் பல பகுதிகளிலும் பொதுவேலை நிறுத்தம்  முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பிலான துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கை திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.