லண்டன் விமான நிலையத்தில் பிரஞ்சு நாட்டவர் கைது: துப்பாக்கியுடன் திரிந்ததால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் பிரஞ்சு நாட்டவர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் 41 வயது மதிக்கத்தக்க பிரஞ்சு நாட்டவர் ஒருவர் துப்பாக்கியுடன் விமானத்தில் செல்ல அனுமதிக்காததை அடுத்து, அங்கிருந்த குப்பை தொட்டியில் துப்பாக்கியை வீசியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த ஆயுதப்படையினர், அந்த மனிதரை கைது செய்து விசாரிக்கும் நோக்கில், குழுமியிருந்த விமான பயணிகளை வெளியேற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, எப்போதும் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும் அந்த முனையத்தை 6 மணி நேரம் மூட வைத்துள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த Sussex பொலிசார், பிரான்ஸ் நாட்டவரின் இந்த நடவடிக்கையை தீவிரவாத சம்பவம் என கருத முடியாது என தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த முனையத்தில் இருந்தவர்களை அச்சமூட்டவே அவர் தமது துப்பாக்கியை பயன்படுத்தினாரா, அல்லது அந்த துப்பாக்கியுடன் விமானத்தில் செல்ல முயன்றார என்பதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் தீவிரவாத தாக்குதலையடுத்து 129 பேர் உயிரிழ்ந்துள்ள நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே லண்டன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் நடமாடியது அச்சமூட்டுவதாகவே இருந்தது என,
சம்பவத்தின் போது அந்த முனையத்தில் இருந்த விமான பயணிகள் தெரிவித்துள்ளனர்.