பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2015

மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராக தமிழர்

இலங்கை தேசிய மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபையில் உப தலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார் கே. விஜிதரன்.
6

நேற்றுச சனிக்கிழமை கொழும்பு விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிர்வாகத் தெரிவில் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான கே. விஜிதரன் உபதலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார்.
இவர் சர்வதேச மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் தரம்1, தரம்2 பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளார். மற்றும் இலங்கை தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பயின்றுள்ளார். வவுனியா மாவட்ட மெய்வன்மை பயிற்றுராக கடமையாற்றிவருகிறார்.