பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2015

ராகுல் காந்தி ஒரு இங்கிலாந்து குடிமகன்.. அவரது குடியுரிமை பறிக்கப்படவேண்டும்! ஆதாரங்களுடன் சுப்ரமண்ய சுவாமி


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு இங்கிலாந்து குடிமகன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், லண்டனில் கடந்த 2003ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பின்னர் கடந்த 2009ம் ஆண்டு கலைக்கப்பட்ட தனியார் நிறுவனம் தொடர்பான நம்பத்தகுந்த ஆதாரங்களை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன்.
"Backcops Limited" என்ற அந்த நிறுவனத்தின் இயக்குனராகவும், செயலாளராகவும் லோக் சபா எம்.பியாகவுள்ள ராகுல் காந்தி செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த நிறுவனம் லண்டனில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் கடந்த 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி கலைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் அறிக்கை ஒன்றில், தனது பிறந்த நாளை சரியாக குறிப்பிட்டிருக்கும் ராகுல் காந்தி, இங்கிலாந்து முகவரியுடன், தேசிய அடையாளத்தில் தான் ஒரு பிரித்தானியர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த ஆண்டு வருவாய் அறிக்கை கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் வரை ராகுல் காந்திக்கு அந்த நிறுவனத்தில் 65% பங்குகள் இருந்துள்ளது.
இந்திய சட்டப்படி இந்திய குடிமகன் ஒருவர் மற்ற நாட்டின் குடியுரிமை பெறுவது சட்டத்தை மீறும் செயல் ஆகும்.
பிரித்தானிய சட்டம் இரட்டை குடியுரிமை முறையை ஆதரிக்கலாம், ஆனால் இந்திய சட்டம் அதனை ஆதரிக்கவில்லை.
எனவே ராகுல்காந்தியின் இந்திய குடியுரிமை மற்றும் லோக்சபா எம்.பி பதவி பறிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.