பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2015

நிதி மோசடி குறித்து பசிலிடம் மேலுமொரு விசாரணை

நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் பிரிவினர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்சவின் இன்னொரு மோசடி தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் அரசஈட்டு முதலீட்டு வங்கியிலிருந்து 3.5 மில்லியனை அமைச்சரவையின் அனுமதியின்றி தனது மனைவி புஸ்பாவிற்கு சொந்தமான அரசசார்பற்ற அமைப்பிற்கு மாற்றியது தொடர்பான ஆவணங்களை  விசேட பொலிஸ் பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் விசாரணைகளும்  ஆரம்பமாகியுள்ளன.

அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவர் தமது வங்கியின் முன்னாள் தலைவரின் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற நிதிமோசடிகள் குறித்து விசேட பொலிஸ்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார்.